Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 26 மே (ஹி.ச.)
தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்த கோமுராஜ் மகன் பிரம்மநாயகம் (35) .
சிப்காட் காவல் நிலையத்தில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு பிரம்மநாயகம், எட்டயபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் ஒயின்ஷாப் வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு சிலர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பிரம்மநாயகம், உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த தகராறைத் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் பிரம்மநாயகத்தை கொடூரமாகத் தாக்கினர்.
இதில் பிரம்மநாயகத்தின் தலையின் பின்புறத்தில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பிரம்மநாயகத்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி நடராஜபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சிவா (எ) சிவலிங்கம் (33), கந்தசாமிபுரம் ஜேசு மகன் யாக்கோபு (30), போல்பேட்டை கிழக்குத் தெரு ஆண்டியப்பன் மகன் கண்ணன் (33), திரவியபுரம் ஜின்னா மகன் காதர் அலி மீரான் (32) ஆகிய 4பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b