தவெகவுக்கு தாவும் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ- வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை, 26 மே (ஹி.ச.) அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியின் மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதி
இசக்கி சுப்பையா


சென்னை, 26 மே (ஹி.ச.)

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியின் மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சி தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று எஸ்.பி. வேலுமணி ஆதரவு தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அதிமுக சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையாவும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவரும் தவெகவில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இசக்கி சுப்பையா, அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி ஆதரவு அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அவர் கட்சி மாறினால், அதிமுக உள்கட்சிப் பிரச்சினை மேலும் தீவிரமடையக்கூடும் என கூறப்படுகிறது.

எனினும், இசக்கி சுப்பையாவின் ராஜினாமா மற்றும் தவெகவில் இணைவு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Hindusthan Samachar / VINOTH KUMAR P