உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது - அன்புமணி இராமதாஸ்
சென்னை, 26 மே (ஹி.ச) தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில் குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகவும், சிறு விவசாயிகளின் அதே அளவிலான கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்த
Anbumani


Vv


சென்னை, 26 மே (ஹி.ச)

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில் குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகவும், சிறு விவசாயிகளின் அதே அளவிலான கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஓரளவு பயனளிக்கும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்கள் தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருப்பது பெரிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே கூடுதல் வருவாய் தரக்கூடியதாக இருக்கும் என்றும், அது திரைத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவாது என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகம் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே குடும்பத்தின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்ததாக குறிப்பிட்ட அவர், அந்த ஏகபோகத்தை ஒழித்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக முடியாமல் முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை வெளியிட அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் எந்த ஒரு திரைப்படத்திற்கும் 33 சதவீதத்திற்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படாததை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், நடிகர்களின் அதிக ஊதியமே திரைத்துறையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பு செலவில் 80 சதவீதம் வரை நடிகர்களின் ஊதியமாக செலவாகும் நிலையை மாற்றி, நடிகர்களின் ஊதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயித்து, திரைத்துறையில் சமநிலையும் சமவாய்ப்பும் உருவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ