திருமலையில் பக்தர்கள் பெரும் திரள் கூட்டம் – தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருப்பு
திருமலை , 26 மே (ஹி.ச.) கோடை விடுமுறை முடிவடைவதை முன்னிட்டு திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தரிசனத்திற்காக பக்தர்கள் அலைமோதுகின்றனர். இன்று காலை 7 மணிக்கே இலவச சர்வதரிசனத்திற்காக வந்த பக்தர்களால் வைகுண்டம்
T


திருமலை , 26 மே (ஹி.ச.)

கோடை விடுமுறை முடிவடைவதை முன்னிட்டு திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தரிசனத்திற்காக பக்தர்கள் அலைமோதுகின்றனர்.

இன்று காலை 7 மணிக்கே இலவச சர்வதரிசனத்திற்காக வந்த பக்தர்களால் வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸ் முழுவதும் நிரம்பியது. க்யூ வரிசைகள் சிலாதோரணம் வரை கிலோமீட்டர் நீளத்தில் நீண்டிருந்தன.

காலை 8 மணிக்குப் பிறகு க்யூவில் சேர்ந்த பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய 18 முதல் 24 மணி நேரம் வரை ஆகும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.300 சீக்கிர தரிசனத்திற்கு 3 முதல் 5 மணி நேரமும், டோக்கன் சர்வதரிசனத்திற்கு 4 முதல் 6 மணி நேரமும் ஆகும் என்றும் கூறினர்.

நேற்று ஒரே நாளில் 89,399 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இவர்களில் 49,985 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளால் ஹுண்டியில் ரூ.4.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 4.88 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

இதேவேளை, திருமலையில் உள்ள டிடிடி மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் மையங்களில் 3,751 பக்தர்கள் சிகிச்சை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA