Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 மே (ஹி.ச.)
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரான சிவராஜ் சிங் சௌஹான் எழுதியுள்ள “அப்னாபன்: மை எக்ஸ்பீரியன்சஸ் வித் நரேந்திர மோடி” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க,ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சரான நாரா லோகேஷ் இன்று டெல்லி பயணம் சென்றார்.
டெல்லி வந்தடைந்த அவருக்கு , விமான நிலையத்தில் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி உடன் அவர் இருந்த தனது அனுபவங்களை சிவராஜ் சிங் சௌஹான் பதிவிட்டுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
இதில் பல தேசிய அளவிலான தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA