நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர்களில் வெளிப்படை தன்மை கட்டாயம் – ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தல்
சென்னை, 26 மே (ஹி.ச.) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் நடவடிக்கைகளில் முழுமையான வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி, நகர நிர்வாக இயக்குநரகம் மற்றும் பேரூராட்சி இயக்குநரக அதிகாரிகளுக்கு கூடுதல் தல
Gagan


Jj


சென்னை, 26 மே (ஹி.ச.)

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் நடவடிக்கைகளில் முழுமையான வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி, நகர நிர்வாக இயக்குநரகம் மற்றும் பேரூராட்சி இயக்குநரக அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, டெண்டர் வெளியிடும் அனைத்து அமைப்புகளும் ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டம் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களிடமிருந்து கள ஆய்வு சான்று மற்றும் உபகரணங்கள் தொடர்பான சான்றுகள் கோர தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்வைப்புத் தொகை, பாதுகாப்புத் தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், கட்டட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து, தாமதமின்றி அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ