Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு மற்றும் மின் இணைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தற்காலிக மின்விநியோக நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, தியாகராய நகர் பகுதியில் பசுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், ஹபீபுல்லா சாலை, துரைசாமி சாலை, வடக்கு உஸ்மான் சாலை, மாம்பலம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ரங்கராஜபுரம், அஜீஸ் நகர், அக்பராபாத், பராங்குசபுரம், ரயில்வே பார்டர் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை பகுதிகளும் மின்தடையால் பாதிக்கப்படுகின்றன. தசரதபுரம் பகுதியில் காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், வெங்கடேச நகர் மற்றும் அருணாசலம் சாலை பகுதிகளிலும் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
சாலிகிராமம் பகுதியில் குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர் மற்றும் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை பகுதிகளிலும், கே.கே.நகரில் பரணி காலனி, காவேரி மருத்துவமனை பகுதி, சூரியா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி.சக்கரபாணி தெரு, பிக் பஜார் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலை, ஷியாமளா டவர், என்.எஸ்.கே. லேன் பகுதிகளிலும், சின்மயா நகரில் முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு மற்றும் காமராஜர் சாலை பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படும்.
திருவேற்காடு பகுதியில் ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், விஜிஎன், அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளும், ஐயப்பன்தாங்கலில் மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, முருகன் கோயில் தெரு, ஜெ.ஜெ. நகர், அம்மன் நகர், பி.ஜி. அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம் மற்றும் சொர்ணபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளும் மின்தடையால் பாதிக்கப்படவுள்ளன.
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இந்த மின்தடை பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தேவையான மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே நிறைவடைந்தால், மின்விநியோகம் அதற்கு முன்பாகவே மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P