Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், அது குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அரசை வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam