Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 26 மே (ஹி.ச.)
கேரள முதல்வர் வி.டி. சதீசன் முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமருடன் நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்று நடைபெறுகிறது.
இந்த சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இந்த சந்திப்பில் கேரள மாநில வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் நிதி உதவி, மற்றும் மாநிலத்துக்கு தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சந்திப்பில் பேசப்பட உள்ள விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
பிரதமருடன் சந்திப்பு முடிந்ததும், பிற்பகல் 2.30 மணியளவில் கர்த்தவ்யா பவனில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்யையும் சதீசன் சந்திக்க உள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்றுள்ள சதீசனுக்கு கேரள ஹவுஸில் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர், அவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யூனைடெட் டெமோக்ராட்டிக் ஃப்ரண்ட் (யுடிஎப்) மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த மே 18ஆம் தேதி சதீசன் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வராக பதவியேற்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA