Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 15 கற்குவாரிகள் மீது புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் தலைமையில் ஆளில்லா விமானம் (Drone) மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 25.05.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ட்ரோன் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 15 கற்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 2 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்குவாரிகள் மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ