Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஏடிஎம் டிஸ்ப்ளே மற்றும் இயந்திரத்தின் அடிப்பகுதியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஏடிஎம் டிஸ்ப்ளே கண்ணாடி உடைந்துள்ளது.
டெல்லியில் செயல்படும் எஸ்பிஐ வங்கியின் மானிட்டரிங் பிரிவினர் சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவத்தை கவனித்து, உடனடியாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய மயிலாப்பூர் போலீசார், ஏடிஎம் சேதப்படுத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ