விடுதியில் தங்கிப் படித்த நரசிங் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நெல்லை, 26 மே (ஹி.ச.) நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மோசஸ் நெல்சன் (வயது 20). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக, மருத்துவமனையின் புதிய கட்டடத்தி
Death

நெல்லை, 26 மே (ஹி.ச.)

நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மோசஸ் நெல்சன் (வயது 20). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக, மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்றிரவு வழக்கம்போல் உணவு அருந்திவிட்டு விடுதி அறையில் சக மாணவர்களுடன் அவர் தூங்கச் சென்றார்.

நள்ளிரவு 1 மணி அளவில் அதே அறையில் உறங்கிக் கொண்டிருந்த மாரியப்பன் என்பவர் எழுந்து பார்த்தபோது, மோசஸ் விபரீத முடிவை தேடிக் கொண்டது குறித்து அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த போலீசார், மாணவர் மோசஸின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, மோசஸ் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்துள்ளதும், நேற்று தனது அறையில் குழந்தைகள் எழுத பயன்படுத்தும் சிலேட் பென்சில்களால் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் அவருக்கு மனதளவில் அழுத்தும் எதுவும் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.

மாணவரின் சாவு குறித்து மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறுவதாகவும், இந்த சம்பவத்தில் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மோசஸ் நெல்சன் (வயது 20).. இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக, மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்றிரவு வழக்கம்போல் உணவு அருந்திவிட்டு விடுதி அறையில் சக மாணவர்களுடன் அவர் தூங்கச் சென்றார்.

நள்ளிரவு 1 மணி அளவில் அதே அறையில் உறங்கிக் கொண்டிருந்த மாரியப்பன் என்பவர் எழுந்து பார்த்தபோது, மோசஸ் விபரீத முடிவை தேடிக் கொண்டது குறித்து அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த போலீசார், மாணவர் மோசஸின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, மோசஸ் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்துள்ளதும், நேற்று தனது அறையில் குழந்தைகள் எழுத பயன்படுத்தும் சிலேட் பென்சில்களால் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் அவருக்கு மனதளவில் அழுத்தும் எதுவும் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.

மாணவரின் சாவு குறித்து மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறுவதாகவும், இந்த சம்பவத்தில் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN