பணகுடி காவல் நிலையத்தில் இருந்து தப்பிய குற்றவாளி மீண்டும் சரணடைந்தார்
நெல்லை, 26 மே (ஹி.ச.) நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவரை பணகுடி காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திர
கைது


நெல்லை, 26 மே (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அவரை பணகுடி காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு காவல் நிலையத்தில் இருந்து அஜித் குமார் திடீரென தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தப்பியோடிய அஜித் குமார் பின்னர் தானாகவே பணகுடி காவல் நிலையத்தில் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் இருந்து கைதி எவ்வாறு தப்பினார் என்பது குறித்தும், சம்பவம் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P