Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
ஓடும் ரயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு ₹180 கோடி மதிப்பிலான 30 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சென்னையைச் சேர்ந்த யேசுதாஸ், மோனிசா ஷீலா உள்ளிட்ட மூவர் மதுரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட யேசுதாஸ் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, யேசுதாஸுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகள் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் உள்ள யேசுதாஸின் வீடு, கொடுங்கையூரில் உள்ள அவரது அசோசியேட்ஸ் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ