வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் - நெல்லை இடையே பயணிகள் சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
திருநெல்வேலி, 26 மே (ஹி.ச.) வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் உள்ள முருக பெருமா
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் - நெல்லை இடையே பயணிகள் சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


திருநெல்வேலி, 26 மே (ஹி.ச.)

வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் உள்ள முருக பெருமான் கோவில்களில் வைகாசி விசாகம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு வைகாசி விசாக விழா (மே 30) வார விடுமுறையில் வருவதால் அறுபடை வீடுகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதன் எதிரொலியாக திருச்செந்துார், திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகம் காணப்படுகிறது.

இந்தநிலையில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் - நெல்லை இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில்,

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் நெல்லை இடையே மே 30-ல் முன்பதிவில்லா பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

மே 30 இரவு 11.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரெயில் மே 31 நள்ளிரவு 12.40 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மே 30-ம் தேதி இரவு 9 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயில் அதே நாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b