Enter your Email Address to subscribe to our newsletters

இராஜபாளையம் , 26 மே (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் அருள்மிகு பூ மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது.
வைகாசி பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 15-ஆம் தேதி
கொடியேறத்துடன் துவங்கியது.
ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு,இரவு அம்மன் வழிபாடு நடைபெற்றது.
11-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு முளைப்பாரி திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு
முளை பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலில் வைத்து கும்மியடித்து வழிபாடு செய்தனர்.
அதைத் தொடர்ந்து 12--ஆம் நாள் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
அதை தொடர்ந்து பின்வந்த பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தும், வேல் குத்தியும், பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த பூக்குழி திருவிழாவில் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்காணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
செய்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA