விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி - பயிர் கடன் தள்ளுபடி குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சென்னை, 26 மே (ஹி.ச) . பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ
விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி - பயிர் கடன் தள்ளுபடி குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்


சென்னை, 26 மே (ஹி.ச)

.

பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.

தேர்தல் பிரச்சாரத்தின் போது,

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.

ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.

ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.

இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.

இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b