Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச)
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட உள்ளார்.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணத்தின் போது தமிழ்நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோருதல், நீட் விலக்கு மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்துதல், புதிய தொழில் முதலீடுகள் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாக உள்ளன.
முதலமைச்சரின் இந்த டெல்லி பயணம் ஒருநாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமருடனான சந்திப்பிற்குப் பின் மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சந்திப்பிற்கான நேரம் மற்றும் அலுவல் நிகழ்ச்சி நிரல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து பயண விவரங்களை முதலமைச்சர் விளக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b