பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்
பஞ்சாப், 26 மே (ஹி.ச.) பஞ்சாப் மாநிலத்தில் 8 மாநகராட்சிகள், 75 நகராட்சிகள் மற்றும் 20 நகர பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். பஞ்சாபில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அ
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்


பஞ்சாப், 26 மே (ஹி.ச.)

பஞ்சாப் மாநிலத்தில் 8 மாநகராட்சிகள், 75 நகராட்சிகள் மற்றும் 20 நகர பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர்.

பஞ்சாபில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 7,555 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி 1,801 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 1,550, பா.ஜ.க 1,316, அகாலி தளம் 1,251 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மே 29 அன்று நடைபெற உள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர் தமன்தீப் கௌர்,

தேர்தல் சுமுகமாக நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, வாக்காளர்கள் உடனடியாக வாக்களிக்க வேண்டும்.

நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் போன்ற கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முழு படையும் களத்தில் உள்ளது, அனைத்து தேர்தல் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி குழுவிலும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 4 முதல் 5 உறுப்பினர்கள் பணியில் உள்ளனர்.

நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். கடைசி நேரம் வரை காத்திருக்காமல் வந்து வாக்களியுங்கள்.

என்று அவர் கூறினார்.

மொஹாலி 6-வது வார்டு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சன்னி சிங் அலுவாலியா, குடிமக்கள் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஆம் ஆத்மி வேட்பாளர் சரப்ஜித் சமனா தனது வெற்றி வாய்ப்பில் நம்பிக்கை தெரிவித்து வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Hindusthan Samachar / vidya.b