Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா , 27 மே (ஹி.ச.)
தெலுங்குதேசம் கட்சி (டிடிபி) மகாநாடு விழாவை முன்னிட்டு, விஜயவாடாவில் 150 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கட்ட்அவுட் அமைக்கப்பட்டுள்ளது.
விஜயவாடா மேற்கு தொகுதியிலுள்ள ஒன் டவுன் சீதம்மவாரி பாதங்கள் பகுதியில், டிடிபி தேசிய துணைத் தலைவர் புத்தா வெங்கண்ணா ரூ.18 லட்சம் செலவில் இந்த கட்ட்அவுட்டை அமைத்துள்ளார்.
இதில் ராமா ராவ் , சந்திரபாபு நாயுடு மற்றும் லோகேஷ் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து புத்தா வெங்கண்ணா கூறியதாவது:
என்டிஆர் பிறந்த இடம் மற்றும் தலைநகர் அமராவதி பகுதி மக்களும் பார்க்கும் வகையில் இந்த கட்ட்அவுட் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் முதல்வர் ராஜசேகரா ரெட்டி ஆட்சிக்காலத்தில் சந்திரபாபு நாயுடு மீது 11 விசாரணைகள் நடத்தப்பட்டும் எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.
மாநில முன்னேற்றத்திற்காக சந்திரபாபு நாயுடு தொடர்ந்து உழைத்து வருகிறார்.
அவர் நெருப்பைப் போன்றவர். அவரை எதிர்க்க முயன்றால் எரிந்து போவார்கள் என்றும் புத்தா வெங்கண்ணா கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA