Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 27 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், (டி.டி.பி.) தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு, மகாநாடு நிகழ்ச்சியில் உரையாற்றி, மாநில புனரமைப்பே தங்களின் முக்கிய இலக்காக இருப்பதாக தெரிவித்தார்.
ஆட்சியில் தீவிரமாகவும், முன்னேற்ற நோக்கிலும் செயல்படுவோம் என்று அவர் கூறினார்.
தேர்தல் சூழ்நிலையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான மகாநாடு ஹைபிரிட் முறையில் நடைபெற்றது.
இதில் சந்திரபாபு நாயுடு மெய்நிகர் வழியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய அவர் கூறியது,
இநிகழ்ச்சியின் வடிவம் மாறியிருக்கலாம்,
ஆனால் மகாநாட்டின் நோக்கம் மாறவில்லை. வாகனங்கள் குறைந்திருக்கலாம்; ஆனால் கட்சி பணியாளர்களின் உற்சாகம் குறையவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்சி எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பணியாளர்களின் தியாகங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
தாக்குதல்கள், வழக்குகள், அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் கட்சி பின்வாங்கவில்லை என்றும், உயிர்நீத்த பணியாளர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
டி.டி.பி. உருவாக்கமும் அதன் கொள்கைகளும் குறித்து அவர் விளக்கினார்.
தேசியக் கொடி நாட்டின் மரியாதை என்றால், மஞ்சள் கொடி தெலுங்கு மக்களின் சுயமரியாதை என்று கூறினார்.
45 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக கட்சி தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாநில புனரமைப்பிற்காக (பா.ஜ.க.) மற்றும் (ஜனசேனா) கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதாகவும், மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவோம் என்றும் கூறினார்.
பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும்போது, பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கியதோடு, “தல்லிக்கு வந்தனம்” போன்ற திட்டங்கள் மூலம் அவர்களின் நிலையை உயர்த்தி வருவதாக தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கியதுடன், சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA