கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது பெற்றவர் ரவி சாஸ்திரி
தமிழ்நாடு, 27 மே (ஹி.ச.) ரவி சாஸ்திரி ஒரு முன்னாள் இந்தியத் கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் மற்றும் இந்திய தேசியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவர் 1981 முதல் 1992 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த
க


தமிழ்நாடு, 27 மே (ஹி.ச.)

ரவி சாஸ்திரி ஒரு முன்னாள் இந்தியத் கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் மற்றும் இந்திய தேசியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆவார்.

இவர் 1981 முதல் 1992 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டராக விளையாடினார்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார்.

இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி.

இவர் கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் இருந்தார். பிறகு ஆல்ரவுண்டராக மாறினார்.

இவர் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக வீரராக பங்கேற்று முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின், சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வானார்.

துவக்கம்: இடது கை சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமாகி, பின்னர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் மாறினார்.

1983 உலகக் கிண்ணம்:

கபில் தேவ் தலைமையில் இந்தியா 1983-ல் உலகக் கிண்ணத்தை வென்ற போது, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.

சாம்பியன்களின் சாம்பியன்:

1985 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகத் துடுப்பாட்ட வாகையாளர் போட்டியில் (WCC) 'சாம்பியன்களின் சாம்பியன்' (Champion of Champions) பட்டத்தைப் பெற்று ஆடி 100 (Audi 100) காரைப் பரிசாக வென்றார்.

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்: சனவரி 10, 1985 அன்று, முதல்தர துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் (ரஞ்சி கோப்பை) ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து கேரி சோபர்ஸின் உலகச் சாதனையைச் சமன் செய்தார்.

கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்i.

1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக இருக்கிறார்.

Hindusthan Samachar / Durai.J