Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தின் செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர், தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும், CDS, MIMS மற்றும் ELITE உள்ளிட்ட திட்டங்கள் மூலம் திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி, உபகரணங்கள், வெளிநாட்டு போட்டிச் செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்காக ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதன் ஒரு பகுதியாக, சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வைஷாலிக்கு ELITE திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ