Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 27 மே (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைச்சான் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா நடைபெற்று வருகிறது.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடைபெற்ற தெருவடைச்சான் உற்சவத்தில், பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சி அதிகாலை வரை நடைபெற்றது.
வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam