Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக நலனுக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர் விஜய், மதியம் 12.30 மணிக்கு டெல்லி சென்றடைவார்.
அவரது பயணத்தையொட்டி முக்கிய அரசுத்துறை செயலாளர்களும் டெல்லி விரைந்துள்ளனர்.
துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகமான சேவா தீர்த் பவனில் முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், இரவு 7.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தமிழகத்திற்கான கோரிக்கை மனுக்களை வழங்க உள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P