Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 27 மே (ஹி.ச.)
அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் காலி பாட்டில்களை மீண்டும் திரும்ப பெறும் திட்டத்தை கைவிடக்கோரி, தருமபுரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 59 அரசு மதுபான கடைகளும் தொடர்ந்து இரண்டாவது நாளாக திறக்கப்படாமல் உள்ளன. காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெறும் நடைமுறையால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனை எதிர்த்து, 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கடை முன்புகளில் மதுபிரியர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற குழப்பம் நிலவுவதால், மதுபிரியர்கள் இடையே அதிருப்தியும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam