சென்னை உயர்நீதிமன்றத்தில் டிவிஏசி இயக்குநர் அருண் ஆஜர்
சென்னை, 27 மே (ஹி.ச.) கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரும் தற்போதைய டிவிஏச
High court


சென்னை, 27 மே (ஹி.ச.)

கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரும் தற்போதைய டிவிஏசி இயக்குநருமான அருண் நேரில் ஆஜரானார்.

வழக்கு தொடர்பாக நீதிமன்ற சம்மன் வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்ததாக கூறப்பட்டதற்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், நீதிமன்ற அதிகாரியை காக்க வைத்ததாக கூறப்படும் போலீஸ்காரரை நேரில் ஆஜர்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ