Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,780-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,240-க்கும் விற்பனையான நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,730க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,650-க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P