Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 27 மே (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர்
அருகே உள்ள பாக்கானா பகுதியைச் சேர்ந்த நிஷாப் (12) என்ற சிறுவன் இன்று முடி வெட்டுவதற்காக வெளியே சென்றிருந்தார்.
பின்னர் முடி வெட்டி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை திடீரென சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கூச்சலிட்டு யானையை விரட்டினர்.
தொடர்ந்து படுகாயமடைந்த நிஷாப்பை உடனடியாக மீட்டு பத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் நிஷாப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN