பெங்களூரு அபார வெற்றி - இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தர்மசாலா , 27 மே (ஹி.ச.) 19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் ‘பிளே-ஆப்’ சுற்றில் நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய
A


தர்மசாலா , 27 மே (ஹி.ச.)

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் ‘பிளே-ஆப்’ சுற்றில் நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த இந்த இரு அணிகளும் தர்மசாலாவில் மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடி தொடக்கம் அளித்தனர். வெங்கடேஷ் ஐயர் 19 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து விராட் கோலி 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தேவ்தத் படிக்கல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் கேப்டன் ரஜத் படிதார், குர்ணால் பாண்ட்யா இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்தனர். குர்ணால் பாண்ட்யா 43 ரன்களில் அவுட்டானார்.

சிறப்பாக விளையாடிய ரஜத் படிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிதேஷ் சர்மா 15 ரன்களுடன் அவருக்கு துணைநின்றார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.

255 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே சிரமத்துக்கு உள்ளானது. சாய் சுதர்சன் 14, சுப்மன் கில் 2, ஜோஸ் பட்லர் 29, நிஷாந்த் சிந்து 5 ரன்களில் அவுட்டானார்கள்.

திவேட்டியா அரைசதம் அடித்து போராடினாலும், மற்ற வீரர்கள் ஆதரவு தரவில்லை.இதனால் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பெங்களூரு அணியின் பந்துவீச்சில் ஜேக்கப் டபி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக விளங்கினார்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தோல்வியடைந்த குஜராத் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA