நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளுக்கான அனுமதி கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்யப்படும் – சமூக ஆர்வலர் நிமல் ராகவனுக்கு அமைச்சர் என். ஆனந்த் பதில்
சென்னை, 27 மே (ஹி.ச) தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு தொடர்பான பணிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், சமூக ஆர்வலர் நிமல் ராகவன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில்,
TVK Bussy Anand


Nn


சென்னை, 27 மே (ஹி.ச)

தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு தொடர்பான பணிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், சமூக ஆர்வலர் நிமல் ராகவன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.

அந்த பதிவில், பல பகுதிகளில் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்கும் முயற்சிகளில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் இத்தகைய பணிகளுக்கான அனுமதி பெறுவதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் மற்றும் தாமதங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பொதுநல நோக்கில் முன்னெடுக்கப்படும் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளுக்கு அரசு துரிதமாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நிமல் ராகவனின் கருத்துகளை கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் சீரமைக்கவும் சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி செயல்படும் இந்த அரசு மக்களின் நலனை முதன்மையாகக் கொண்ட அரசு என்றும், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்வைக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, நிமல் ராகவன் முன்வைத்துள்ள நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளுக்கான அனுமதி தொடர்பான கோரிக்கை விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் என். ஆனந்த் உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ