பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் முதலமைச்சர் கொள்கை முடிவு எடுப்பார் - அமைச்சர் விஸ்வநாதன்
மதுரை, 27 மே (ஹி.ச.) மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்ற முந்தைய
விஸ்வநாதன்


மதுரை, 27 மே (ஹி.ச.)

மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை தற்போதைய அரசு கட்டாயமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மேலும், “பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருப்பது குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கொள்கை ரீதியான முடிவை எடுப்பார்” என்றும் தெரிவித்தார்.

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ஜோதிமணி மற்றும் மாணிக்தாகூர் ஆகியோருக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டில், நான் மாணிக்தாகூரின் கருத்துக்கு ஆதரவாக இருப்பேன்” என்று கூறினார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், “மேகதாது அணையில் ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், “த.வெ.க அரசு முழு 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும்” என்றும் அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam