புலியூரான் கல் குவாரிகளில் அமைச்சர் டி.கே.பிரபு ஆய்வு
சென்னை, 27 மே (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் புலியூரான் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, குவாரிகளில் பராமரி
Prabhu


சென்னை, 27 மே (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் புலியூரான் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, குவாரிகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அனுமதி ஆவணங்கள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார்.

மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள், உடல்நல பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்பாடு, அவசரகால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் குவாரி நிர்வாகத்தினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மதுரை மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் லோ.சட்டநாதன் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ