Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 27 மே (ஹி.ச.)
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த பிப்.24 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இன்று எட்டாவது முறையாக நீர்கொழும்பு மாவட்டம் வெளிச்சூரா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 12 பேரின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 8ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 12 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆறு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் தெற்கு கடற் பரப்பில் வைத்து கடந்த 12ந்தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மீனவர்களின் வழக்கு இன்று இரண்டாவது முறையாக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் ஆறு பேரின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 8 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN