இரண்டாவது நாளாக சேலத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடல் – பணியாளர்கள் போராட்டம் தீவிரம்
சேலம், 27 மே (ஹி.ச) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சேலத்தில் இரண்டாவது நாளாக அனைத்து டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் வாங்க வந்த குடிமகன்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டாஸ்மாக்


சேலம், 27 மே (ஹி.ச)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சேலத்தில் இரண்டாவது நாளாக அனைத்து டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் வாங்க வந்த குடிமகன்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

டாஸ்மார்க் பணியாளர்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளில், காலி பாட்டில் வாங்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டாஸ்மார்க் கடைகளில் உடையும் பாட்டில்களுக்கு நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல், கூடுதல் கடைகள் அமைத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான செலவுகளை டாஸ்மார்க் நிர்வாகமே ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் பணியாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மார்க் பணியாளர்கள், இரண்டாவது நாளாகவும் சேலத்தில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் செயல்படாததால், மதுபானம் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam