Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் ஆகியோரை, சூலூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரை செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், இருவரையும் “பாலியல் குற்றவாளிகள்” என அறிவித்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் பொதுசுகாதாரத்திற்கு பாதகமாக செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708 100100 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ