Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான பக்ரீத் பண்டிகை மே 28-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகன் இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.
ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b