டாஸ்மாக் பணியாளர்கள் இன்று பணிக்குத் திரும்புமாறு அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள்
சென்னை, 27 மே (ஹி.ச.) சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் முதலில் 2022 மே மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு, தற்போது சென்னை, திருநெல்வேலி, விருதுநகர் தவிர
Vigne


Hh


சென்னை, 27 மே (ஹி.ச.)

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் முதலில் 2022 மே மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு, தற்போது சென்னை, திருநெல்வேலி, விருதுநகர் தவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், காலி மதுபான பாட்டில்களை வெளி முகமை மூலம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பல கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், அனைத்து சங்க பிரதிநிதிகளுடனும் மேலாண் இயக்குநர் ஆலோசனை நடத்தியதாகவும், பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தும் கடைகள் திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, காலி மதுபான பாட்டில்களை வெளி முகமை மூலம் திரும்பப் பெறும் திட்டம் உருவாக்கப்பட்டு, ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் உயர்நீதிமன்றத்தில் உறுதிமொழி தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தற்போதைய காலி பாட்டில் கையாளும் நடைமுறை முழுமையாக நீக்கப்படும் என்றும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து பணியாளர்கள் இன்று முதல் வழக்கம்போல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ