Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 மே (ஹி.ச.)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி நாளை 28.05.26 முதல் 31.05.26 வரை நான்கு நாட்களுக்கு 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபடுவது ஆண்டு முழுவதும் வழிபடுவதற்கு சமம் என்று கருதப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஏராளமான பக்தர்கள் அன்றைய தினம் பாதயாத்திரையாக வந்தும் சாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்
மேலும் இந்த திருவிழாவானது வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கோவிலை பொறுத்த வரை தற்போது பொது தரிசன வரிசை, நூறு ரூபாய் கட்டண தரிசன வரிசை, முதியோர்களுக்கான தரிசன வரிசை, பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்களுக்கான தரிசன வரிசை என்று தரிசன வரிசைகள் நடைமுறையில் உள்ளன.
இதில் நூறு ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய பக்தர்களுக்கான அந்த 100 ரூபாய் கட்டணத்தை மட்டும் கோவில் நிர்வாகம் வருகிற நான்கு நாட்களுக்கு அதாவது28.05.26 முதல் 31.05.26 வரை நான்கு மட்டும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் கோவிலில் கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் அதற்கான தரிசனத்தை செலுத்தாமலேயே தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN