திமுக செயல்வீரர்கள் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் - கே.என். நேரு
திருச்சி, 27 மே (ஹி.ச.) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழகம் போன்ற புதிய வரவு
KN Nehru


திருச்சி, 27 மே (ஹி.ச.)

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழக வெற்றிக்கழகம் போன்ற புதிய வரவுகள் வாக்குகளைப் பிரித்துள்ளன.

அதிமுக கூட்டணியின் வாக்குகள் எங்கு திரும்பும் என்ற கணக்கும் உள்ளது.

குறிப்பாக, சமூக வலைதளங்களை மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி, இளைய தலைமுறை மற்றும் குடும்பங்களிடம் அவர்கள் நேரடியாகச் சென்றடைந்து வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

நாம் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருந்த நேரத்தில் அவர்கள் இந்தத் தந்திரத்தால் முன்னேறியுள்ளனர்.

கழகத்தை மீண்டும் வலுப்படுத்த முத்தமிழறிஞர் கலைஞர் என்ற பெயரே மிகப்பெரிய ஆயுதம் உள்ளது. ஜூன் 3-ஆம் தேதி கலைஞரின் 103-வது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்

கலைஞரின் புகழையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமே நாம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும்.

அமைச்சராக எனக்கு இருக்கும் பொறுப்பை விட, களத்தில் நிற்கும் ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்குப் பொறுப்பு அதிகம்.

கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது திருச்சி மாவட்டம் தான் எப்போதும் அரணாக நின்று வெற்றியைத் தேடித்தந்தது.

அதேபோல், இப்போதும் மெத்தனமாக இருக்காமல் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN