Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
சி. விஜயலட்சுமி தலைமையில் பால்வளத்துறையின் பல்வேறு பிரிவுகளின் ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகம், நிதி, விற்பனை, திட்டமிடுதல், கொள்முதல், பொறியியல், தர உறுதி உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநிலத்தின் பால் உற்பத்தி, பால் கொள்முதல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் செயல்பாடுகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் பணிகள், பால் கூட்டுறவு நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை, கால்நடைகளுக்கான தரமான தீவனங்கள், தூய்மையான பால் உற்பத்தி, தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்களின் நலனை முன்னிறுத்தி, வெளிப்படையான நிர்வாகத்தை அனைத்து அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனு ஜார்ஜ், அ. ஜான் லூயிஸ், ச. கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ