எம்எல்ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பெரும் பணப்பரிமாற்றம் - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்பி தனபால்
சென்னை, 28 மே (ஹி.ச.) தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த மதுராந்தகம் எம்எல்ஏ
எம்எல்ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பெரும் பணப்பரிமாற்றம் - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்பி தனபால்


சென்னை, 28 மே (ஹி.ச.)

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் பின்னணியில் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனபால் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் பதவியேற்ற உடனேயே ராஜினாமா செய்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னணி குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

த வெ க விற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அண்ணா திமுக வை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b