அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார்
சென்னை, 28 மே (ஹி.ச.) கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெல்ல மண்டி நடராஜன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் மு
வெல்லமண்டி நடராஜன்


சென்னை, 28 மே (ஹி.ச.)

கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெல்ல மண்டி நடராஜன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த வெல்லமண்டி நடராஜன், சிறிது காலம் அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். என் நிலையில் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டார்.

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெல்லமண்டி நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்தவர் தனது ஆதரவாளர்களுடன் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P