Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 28 மே (ஹி.ச.)
கோடை விடுமுறையையொட்டி திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் பக்தர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
இதனால் திருமலையில் கடும் நெரிசல் நிலவி வருகிறது.
ஒரே நாளில் 89,403 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அதிகரித்துள்ளதால் உண்டியல் வருமானமும் உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ரூ.4.99 கோடி காணிக்கை கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.
TTD வெளியிட்டுள்ள தகவலின்படி, 49,958 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
மேலும் 4.22 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2.52 லட்சம் பக்தர்கள் அன்னதானம் பெற்றனர். 3,603 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சர்வ தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம் அதிகமாகியுள்ளது.
டோக்கன் இல்லாத தரிசனத்திற்கான அனைத்து கம்பார்ட்மெண்ட்களும் நிரம்பியுள்ளன. இதனால் வரிசைகள் கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை நீண்டுள்ளன.
தற்போது சர்வ தரிசனத்திற்கு சுமார் 12 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA