என்டிஆர் ஜெயந்தி- கர்நாடக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மரியாதை
அமராவதி, 28 மே (ஹிச.) தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர், முன்னாள் முதல்-அமைச்சர் நந்தமூரி தாரக ராமராவ் அவர்களின் 103-வது ஜெயந்தி இன்று மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஆந்திரப் பிரதேச முதல்-அமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு மற்று
A


அமராவதி, 28 மே (ஹிச.)

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர், முன்னாள் முதல்-அமைச்சர் நந்தமூரி தாரக ராமராவ் அவர்களின் 103-வது ஜெயந்தி இன்று மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, ஆந்திரப் பிரதேச முதல்-அமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் என்டிஆருக்கு மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

உழைப்பால் மனிதன் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு என்டிஆர் சிறந்த எடுத்துக்காட்டு. தெலுங்கு மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் தலைவராக அவர் திகழ்கிறார்.

திரைப்படமும், அரசியலும் ஆகிய இரு துறைகளிலும் சாதனை படைத்து, மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாரா லோகேஷ் தனது பதிவில்,

உலகிற்கு தெலுங்கு மக்களின் பெருமையை எடுத்துச் சென்றவர் என்டிஆர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்து, நலத்திட்டங்களுக்கு அடையாளமாக திகழ்ந்தார்.

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் அந்த மாமனிதருக்கு எனது வணக்கங்கள். தாத்தா… நீங்கள் எங்களுக்கு என்றும் ஊக்கமாக உள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், என்டிஆரின் மகள் நாரா புவனேஸ்வரி தனது பதிவில்,

மூன்று தலைமுறைகளாக என்டிஆருக்கு கிடைக்கும் மரியாதை குறையவில்லை. சொன்னதை செயலில் காட்டிய அவரது உறுதிப்பாடு தான் அவரை ‘அண்ணாகாரு’ என மக்களால் அழைக்கச் செய்தது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஜெயந்தி தினத்தில், என்டிஆரின் சேவைகள் மற்றும் இலட்சியங்களை அவரது குடும்பத்தினர் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA