ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – ஜூலைக்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் கெடு
திருவண்ணாமலை , 28 மே (ஹி.ச) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகிய இருவரும் அப்பெண்ணை பால
ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – ஜூலைக்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் கெடு


திருவண்ணாமலை , 28 மே (ஹி.ச)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வந்திருந்தார்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரு காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை காலதாமதமின்றி நடத்தி, ஜூலை 2026 மாத இறுதிக்குள் முடித்து வைக்க வேண்டும் என திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்களே குற்றச்செயலில் ஈடுபட்டதாக எழுந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பல்வேறு மகளிர் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b