ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி
சண்டிகார் , 28 மே (ஹி.ச.) 19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் இந்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன்படி, வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநி
H


சண்டிகார் , 28 மே (ஹி.ச.)

19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் இந்த சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதன்படி, வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் நடைபெற்றது. இதில் 3-வது இடம் பெற்ற ஹைதராபாத் அணி, 4-வது இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் சுமிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் முதலே அதிரடி நிலவியது.

தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி, வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியார். மேலும், கம்மின்ஸ் வீசிய ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அவர் 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால் அதிவேக சத சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு நழுவியது. மேலும், ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கெய்ல் (59 சிக்ஸர்கள்) சாதனையையும் அவர் கடந்தார்.

பின்னர் துருவ் ஜுரேல் அரைசதம் அடித்தார். ரியான் பராக் 26 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து 244 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தது. அபிஷேக் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

இஷான் கிஷன் 33 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து மற்ற வீரர்கள் தடுமாறிய நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி (38), சலீல் அரோரா (35) மட்டும் போராடினர்.

ஆனால், மற்ற வீரர்கள் ஆதரவு அளிக்காததால், ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA