Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 3, 2026 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது.
மாணவர்கள் நேரில் செல்லாமலேயே தங்களுக்கு விருப்பமான தொழில் பிரிவு மற்றும் பயிற்சி நிலையத்தை தேர்வு செய்யலாம்.
அரசு ஐடிஐ-களில் உள்ள பல்வேறு தொழில் பிரிவுகளில் சேர எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தகுதியான மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பிக்கும் முன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக படித்து, தேவையான சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b