தேர்தல் வாக்குறுதியை தவெக நிறைவேற்ற வேண்டும் - மார்க்சிஸ்ட் சண்முகம்
ஈரோடு, 28 மே (ஹி.ச) ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பினராய் விஜயன் இடத்தில் அமலாக்கத்துறை சோதனை என்பது கண்டிக்கத்தக்கது. பிஜேபி கடந்த 12 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை இப்படித
CPIM Shanmugam


ஈரோடு, 28 மே (ஹி.ச)

ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பினராய் விஜயன் இடத்தில் அமலாக்கத்துறை சோதனை என்பது கண்டிக்கத்தக்கது. பிஜேபி கடந்த 12 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை இப்படித்தான் நடத்துகிறார்கள். அதனுடைய தொடர்ச்சியாக தான் தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தற்போது அறிவித்துள்ள தள்ளுபடி விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

காக்ரோச் ஜனதா பார்ட்டி குறித்த கேள்விக்கு,

தீபக் என்பவர் உருவாக்கி அந்த சமூக வலைத்தளத்தில் இரண்டு கோடி நபர்கள் சேர்ந்துள்ளனர். ர்உண்மையில் ஆட்சியாளருக்கு எதிரான கோபத்தில் எவ்வளவோ இளைஞர்கள் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. வேலையின்மை இந்த அளவுக்கு உள்ளது என்பதை குறித்து இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா கொடுத்த கேள்விக்கு ஆரோக்கியமானது அல்ல வாக்களித்த மக்களுக்கு அவமான அளித்த செயல், இவர்களை நம்பி வாக்களித்துள்ளார்.

இது மக்களின் விரோதமானது, ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தது ஆரோக்கியமான அரசியல்ல என நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்,

இடைத்தேர்தல் யாருடன் கூட்டணி என்பது குறித்த கேள்விக்கு மாநில குழு உடன் சேர்ந்து முடிவு எடுப்போம்.

தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு செங்கல் கூட வைக்கக் கூடாது. மீறி வைக்க முயற்சித்தால் தமிழக விவசாயிகள் அதனை எதிர்ப்போம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN