மே 28, (இன்று)உலக பட்டினி தினம்.!
தமிழ்நாடு, 28 மே (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் 2011 ஆம் ஆண்டு முதல் ''தி ஹங்கர்
வி


தமிழ்நாடு, 28 மே (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகளவில் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் 2011 ஆம் ஆண்டு முதல் 'தி ஹங்கர் பிராஜெக்ட்' (The Hunger Project) அமைப்பால் இத்தினம் தொடங்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது

முக்கிய நோக்கங்கள்:

உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.

உணவு வீணாவதைத் தடுத்தல் மற்றும் அனைவருக்கும் நிலையான உணவு கிடைப்பதை உறுதி செய்தல்.

பட்டினியால் வாடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல்

'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அப்போதே பாரதியார் பாடினார்.

ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது.

முக்கியத்துவம்:

இது உலகளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை நினைவுகூரும் ஒரு தினமாகும்.

எனவே, பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும்.

Hindusthan Samachar / Durai.J